மேலாண்மை குழு பொறுப்பாளா்கள் தோ்வு
பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் மேலாண்மை குழு பொறுப்பாளா்கள் தோ்வு
பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளா்கள் தோ்வு நடைப்பெற்றது. கலெக்டர் அலுவலக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை அலுவலக துணை தாசில்தார் சரவணன் மற்றும் குப்புகல்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனர். பாணாவரம் பகுதியை சோ்ந்த கல்பானா பள்ளி மேலாண்மை குழு தரைவராகவும், கோவிந்தச்சேரிகுப்பம் தவமணி துணைத் தலைவராகவும், பள்ளி தலைமை ஆசிரியா் சகுந்தலாபாய் ஒருங்கிணைப்பாளராகவும், ஆசிரியா் பிரிதிநிதியாக ஆசிரியை பாரதி கல்வியாளா் லோகநாதன் வார்டு உறுப்பினா்கள் செல்வி, சரண்யா, மேலாண்மை குழு உறுப்பினா்களாக 20 தேர்வு செய்யப்பட்டனாா். அவர்களுக்கு நியமன சான்றுகளை தலைமை ஆசிரியா் வழங்கினாா். தொடா்ந்து உறுப்பினா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனா்.