79 அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 79 அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-05 19:03 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூரில் 79 அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

மேலாண்மை குழு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள 79 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை மேரி தலைமையில் நடைபெற்றது. ஆசிரிய பயிற்றுனர் கற்பகம் வரவேற்றார்.

கூட்டத்தைத் தொடங்கி வைத்து வட்டாரக்கல்வி அலுவலர் மலர்கொடி பேசியதாவது:-

ஜனவரி மாதம் முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு, முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், இதற்கென பள்ளி மேலாண்மைக் குழு தொகுதியை, பெற்றோர் செயலியில் ஒரு பகுதியாகப் பள்ளிக்கல்வி துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

கலந்துரையாடல்

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசுப்பள்ளிகளின் மாறிவரும் தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை "நம்ம ஸ்கூல்-நம்ம ஊரு பள்ளி திட்டம்" என்ற ஆற்றல்மிகு திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் இல்லம் தேடிக்கல்வி தொடக்க நிலை தன்னார்வலர் குறைதீர் கற்பித்தல் குறித்தும், மாணவர்களின் கற்றல் நிலை குறித்தும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.

குழந்தைகளின் விவரம்

உயர்தொடக்கநிலை தன்னார்வலர், மையத்தில் அதிக கவனம் தேவைப்படும் குழந்தைகளின் விவரங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, இல்லம் தேடிக்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், ஆசிரிய பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பேசினர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவி முத்துலட்சுமி, துணைத்தலைவி கண்ணாம்பாள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியை ஆனந்தவல்லி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்