மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-11-17 00:15 IST

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை வடக்கு தெருபகுதியை சேர்ந்தவர் உபைதுல்கர்ணை (வயது 57). தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் சித்தார்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரம் அருகே பழங்குளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சென்ற போது முன்னால் ரோட்டை கடந்து செல்ல முயன்ற 2 பேர் மீது மோதிவிடாமல் தவிர்ப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த உபைதுல்கர்ணை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.. இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்