மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
மூதாட்டியிடம் நகை பறித்தவரை கைது செய்த போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
விருதுநகர்,
ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் தவசி. இவருடைய மனைவி குருவம்மாள் (வயது 65). இவர் நடைபயணம் முடித்து விட்டு வீட்டிற்கு வந்த போது மர்மநபர் ஒருவர் 5 பவுன் நகையை பறித்துச்சென்றார். இதுகுறித்து குருவம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, கோபாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு இளங்கோ ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு நகையை பறித்துச்சென்ற சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து பறித்துச் சென்ற நகையை மீட்டனர். இக்குற்றச்செயல் தொடர்பாக துப்பு துலக்குவதில் துரிதமாக செயல்பட்டு நகையை பறித்துச் சென்றவரை கைது செய்து நகையை மீட்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.