மனைவியை கத்தியால் குத்தியவர் கைது

மனைவியை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-03 18:15 GMT

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வசிஷ்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 36). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்லம்மாள்(30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகாலிங்கம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் அவரை, செல்லம்மாள் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகாலிங்கம் அருகில் இருந்த கத்தியை எடுத்து செல்லம்மாளின் கால்களில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த செல்லம்மாள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து செல்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்