செல்போன் கடை ஊழியரை தாக்கியவர் கைது
செல்போன் கடை ஊழியரை தாக்கியவர் கைது
அம்மாப்பேட்டை அவரி கொல்லை தெருவில் வசித்து வருபவர் மோகனசுந்தரம் மகன் தியாகராஜன் (வயது 25). இவர் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவானந்தம் மகன் மணிமாறன் (22), அவரது நண்பர் வடுவூரை சேர்ந்த முருகானந்தம் ஆகியோர் கடைக்கு செல்போன் வாங்க வந்தனர். அப்போது 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிமாறன், முருகானந்தம் ஆகியோர் தியாகராஜனை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான முருகானந்தத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.