குன்னத்தூர் அருகே ஓரின சேர்க்கை தகராறில் தபால்காரரை அடித்து ெகான்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொலை
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வதுரை (வயது 62). இவர் திருப்பூரில் தற்காலிக தபால்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 14-ந்தேதி வீட்டின் அருகே சாலையோரம் கால் இடறி கீழே விழுந்ததாகவும், உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், போகும் வழியில் அவர் இறந்துவிட்டதாகவும் குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரித்து வந்தனர்.
அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வதுரையின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
வாலிபர் கைது
இதையடுத்து போலீசார் கொலை வழக்கமாக மாற்றி, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, கொலை செய்யப்பட்ட செல்வதுரையும், மரியபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ்(27) என்பவரும் ஓரின சேர்க்கையாளராக இருந்துள்ளனர்.
இதையடுத்து தினேசை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களுக்கு இடையே கடந்த 14-ந் தேதி ஏற்பட்ட தகராறில் தினேஷ் தாக்கியதில் செல்வதுரை இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.