நாய்கள் கடித்து ஆண் மயில் படுகாயம்
நாய்கள் கடித்து ஆண் மயில் படுகாயமடைந்தது.;
இலுப்பூர் பள்ளிவாசல்காடு வரத்துவாரி பகுதியில் சாலையோரம் இரை தேடி சென்ற மயிலை அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் துரத்தி கடித்து குதறின. இதை கண்ட அந்த வழியாக வந்தவர்கள் நாய்களை துரத்தி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆண் மயில் நடக்க முடியாமல் கீழே விழுந்தது. இதையடுத்து அவர்கள் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மயிலை மீட்டு இலுப்பூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் மயிலுக்கு சிகிச்சை அளித்த பின்னர் மயிலை தீயணைப்பு துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.