தினமும் 600 பேருக்கு மலேரியா பரிசோதனை

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தினமும் 600 பேருக்கு மலேரியா பரிசோதனை செய்யப்படுகிறது.

Update: 2023-04-25 16:20 GMT

திண்டுக்கல் மரியநாதபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தின நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாநகராட்சி மேயர் இளமதி தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மலேரியா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுதொடர்பான துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

மேலும் 2027-ம் ஆண்டுக்குள் மலேரியா தொற்று பரவலை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். இதேபோல் மலேரியா பரவலை கண்டறிய மாநகராட்சி பகுதியில் தினமும் 600 பேருக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மலேரியா பரவல், தடுப்பு முறை தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஜான்பீட்டர், பொது சுகாதார குழு தலைவி இந்திராணி, மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) செபஸ்டின், துப்புரவு ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் முத்துக்குமார், ஹரிஹரன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் துப்புரவு ஆய்வாளர் முருகையா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்