உற்பத்தி குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு

உற்பத்தி குறைவால் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது.

Update: 2022-11-11 18:35 GMT

நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், நல்லிக்கோவில், கவுண்டன்புதூர், பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, நாயக்கனூர், சோளக்காளிபாளையம், வெங்கம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர்.பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வேளாண்ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20 க்கு விற்பனையானது.இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22-க்கு விற்பனையானது. 

Tags:    

மேலும் செய்திகள்