நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில்வேளாண்ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்ேபாது வரத்து குைறந்துள்ளதால் கடந்த வாரம் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்றது தற்ேபாது ரூ.22-க்கு விற்பனையாகிறது.