பராமரிப்பு பணி: சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்கள் பகுதியாக ரத்துசெய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-04-13 01:09 GMT

சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, பெங்களூருவில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் வரும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12608) வருகிற 17 மற்றும் 24-ந் தேதிகளில் காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு, மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12609) வருகிற 17 மற்றும் 24-ந் தேதிகளில் சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12680) வருகிற 17, 24, 30 ஆகிய தேதிகளில் காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில், மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு, கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12679) சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

மைசூருவில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12610) வருகிற 30-ந் தேதி காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் (12607) வருகிற 30-ந் தேதி சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்