தென்னிந்தியாவின் முக்கிய தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - கமல்ஹாசன் பேச்சு

தென்னிந்தியாவின் முக்கிய தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-20 16:28 GMT

சென்னை,

கலைஞர் 100 புத்தக வெளியீட்டு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-

வட்டார மொழிகளில் ஊரி திளைத்தவர்களிடத்திலும் தமிழைக் கொண்டு சேர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். திமுகவில் சேர வேண்டும் என்று கலைஞர் தந்தி கொடுத்தபோது நான் பதில் கொல்லைவில்லை. அதைபற்றி அவர் என்றுமே என்னிடம் கேட்டதே இல்லை. ஆலமரத்தின் அடியில் விருட்சம் வளராது என்பதற்கு மாற்றாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் எனும் ஆலமரத்தின் அடியில் விருட்சமாக வளர்ந்துள்ளார்.

ஜனநாயகம், சமூகநீதி ஆகியவற்றை உயர்த்தி பிடிப்பதில் இந்தியாவில் முதல்-அமைச்சர் உயர்ந்து நிற்கிறார். ஜனநாயகம், சமூகநீதி, கூட்டாட்சிக்குரல் என்று தென்னிந்தியாவின் முக்கியத் தலைவராகத் திகழ்கிறார்.

காந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் எழுதியவர் கலைஞர் கருணாநிதிதான். 2 லட்சம் பக்கங்கள் எழுதியுள்ளார். பகுத்தறிவு, கருத்து சுதந்திரத்துக்கு நம்பிக்கை கொண்ட என் போன்றவர்களுக்கு எட்டும் தொலைவில் இருந்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டின் முகவரி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தன்னுடன் முரண்படும் உரிமையை அனைவருக்கும் வழங்கியவர் கலைஞர். கடந்த நூற்றாண்டு தமிழக வரலாற்றின் முதல் 50 ஆண்டுகள் பெரியார், அண்ணா யுகம் என்றால், அடுத்த 50 ஆண்டுகள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் யுகம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்