பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிப்பு

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Update: 2023-03-16 05:21 GMT

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள நகைக்கடையின் ஷட்டரை உடைத்து 9 கிலோ தங்க நகை மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்துச் சென்றனர். கடந்த மாதம் 10-ந் தேதி நடந்த கொள்ளை தொடர்பாக திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு மேற்பார்வையில் 9 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலை தேடி வந்த நிலையில், முக்கிய குற்றவாளியான கங்காதரன் உள்ளிட்ட 2 பேரை பெங்களூர் போலீசார் வேறொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடமிருந்து இந்த கொள்ளை தொடர்பாக பெங்களூரு போலீசார் 2½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய திவாகர் (28) மற்றும் கஜேந்திரன் (31) ஆகிய 2 பேரை கடந்த 4-ந் தேதி அதிகாலை கைது செய்த தனிப்படை போலீசார் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பின் புழல் ஜெயில் அடைத்தனர். இதையடுத்து கடந்த 9-ந் தேதி முக்கிய குற்றவாளியான கங்காதரனை 5 நாள் போலீஸ் காவலில் பெங்களூரு அழைத்து சென்று சென்னை திரும்பியதையடுத்து, நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்