வெங்கடாபுரத்தில் மகாவீரர் ஜெயந்தி விழா

சத்துவாச்சாரியை அடுத்த வெங்கடாபுரத்தில் மகாவீரர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-04-05 00:22 IST
வெங்கடாபுரத்தில் மகாவீரர் ஜெயந்தி விழா

சத்துவாச்சாரியை அடுத்த வெங்கடாபுரத்தில் மகாவீரர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த வெங்கடாபுரத்தில் உள்ள 1008 வாசு பூஜ்ய பகவான் திகம்பர ஜினாலயத்தில் மகாவீரர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மகாவீரருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு பச்சரிசி, கிராம்பு, ஏலக்காய் உட்பட நறுமணப் பொருட்கள் கொண்டு மந்திரங்கள் வாசிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ரவிக்குமார் செய்திருந்தார். இந்த ஆலயத்தில் நந்திஸ்வர தீப பூஜை, மார்கழி மாதத்தில் முக்கடையின் போது 365 அகல் விளக்கு பூஜை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்