மகாமாரியம்மன் கோவில் திருவிழா
கள்ளிமந்தையம் அருகே மகாமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள வடபருத்தியூரில் பிரசித்தி பெற்ற விநாயகர், துர்க்கையம்மன், மகாமாரியம்மன், கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழா, கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதனையடுத்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு பக்தர்கள் சென்று, கலசங்களில் புனிதநீர் எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் சாமிகளுக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது.
அதன்பிறகு சிறப்பு பூைஜ மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலில் இருந்து வேல் எடுத்து வீடு, வீடாக சென்று நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதனையடுத்து முளைப்பாரி ஊர்வலத்துடன், அம்மன் கரகம் ஆற்றுக்கு கொண்டு சென்று விடப்பட்டது. விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்கராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.