சதுரகிரியில் மகாளய அமாவாசை சிறப்பு பூஜை
சதுரகிரியில் இன்று மகாளய அமாவாைசயைமுன்னிட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.;
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (சனிக்கிழமை) புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மகாளய அமாவாசை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையில் குடிநீர் தேவைக்காக 5 இடங்களில் குடிநீர் வசதியும், பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக தாணிப்பாறை அடிவார பகுதி, கோவில் வளாகப்பகுதி, நீரோடை பகுதிகளில் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முடித்தவுடன் அடிவாரப்பகுதிக்கு திரும்பி வந்து விட வேண்டும் என வனத்துறையினர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.