புரட்டாசி பிறப்பையொட்டி திருவிடைமருதூர் சூரியனார் கோவிலில் மகாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
புரட்டாசி மாத பிறப்பை வரவேற்கும் விதமாக உற்சவர் சிவசூரியபெருமானுக்கு 15 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.;
தஞ்சை,
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள நவகிரக ஸ்தலமான சூரியனார் கோவிலில் மகாபிஷேகம் நடைபெற்றது. புரட்டாசி மாத பிறப்பை வரவேற்கும் விதமாக உற்சவர் சிவசூரியபெருமானுக்கு 15 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மகா தீபாராதணை காட்டப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.