மகா மாரியம்மன் வீதியுலா
கோவில் திருவிழாவையொட்டி மகா மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் குடிக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து மகா மாரியம்மன், பேச்சியம்மன், பெரியாண்டவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மகா மாரியம்மன், பேச்சியம்மன், பெரியாண்டவர் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.