மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

வில்லியநல்லூர் ஓடக்கரை மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது

Update: 2023-08-15 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் தாலுகா வில்லியநல்லூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக காவிரி தீர்த்தபடித்துறையிலிருந்து சக்திகரகம் அலகு காவடியுடன் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்