நொய்யல்,
நொய்யல் அருகே சேமங்கி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பொங்கல் பூஜை, விளக்கு பூஜை நடைபெற்றது. மறுநாள் அசைவ பூஜை நடைபெற்றது. திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.