மதுரை இளைஞருக்கும் ஐரோப்பிய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம்
மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐரோப்பா பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
ராமேஸ்வரம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் காளிதாஸ். இவருக்கும் ஐரோப்பா, செக் குடியரசை சேர்ந்த கானாபம்குலோவா என்ற பெண்ணுக்கும் இந்து முறைப்படி ராமேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பின்னர் இந்த ஜோடிகள் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது இவர்களை கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்தபடி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் வேலை செய்த போது 2 ஆண்டுகள் இந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்து முறைப்படி கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளதாகவும் இளைஞர் காளிதாஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.