மதுரை வீரன் சாமி கோவில் திருவிழா

மதுரை வீரன் சாமி கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-06-17 18:34 GMT

வேலாயுதம்பாளையம், 

புகழூர் நகராட்சி காலனியில் மதுரை வீரன் சுவாமி ேகாவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 1-ந்தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் பெண்கள் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். கிடா வெட்டு பூஜையும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்