மதுரை ரெயில் தீ விபத்து: விசாரணை முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் - ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி பேட்டி

மதுரை ரெயில் தீ விபத்து குறித்து விசாரணை முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-08-27 08:04 GMT

மதுரை,

மதுரை ரெயில் நிலையத்தின் அருகே போடி ரெயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரெயில் பெட்டி நேற்று தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 9 பயணிகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரெயில் பெட்டி தீ விபத்து குறித்து தெற்கு வட்ட ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் வி.எம்.சவுத்ரி இன்று விசாரணை நடத்தினார். மேலும் ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் தெற்கு வட்ட ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் வி.எம்.சவுத்ரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மதுரை ரெயில் தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருகிறது, விசாரணை முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணையின் முடிவில் தெரிய வரும். விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டி இருந்ததால், அவர்களிடம் விரைவாக விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்