மதுரை போலீஸ் அணி வெற்றி
நத்தத்தில் நடந்த மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் மதுரை போலீஸ் அணி வெற்றி பெற்றது.;
நத்தம் கோவில்பட்டியில் உள்ள துரைக்கமலம் மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மைதானத்தில் மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. இதில் மதுரை போலீஸ் அணி, நத்தம் நண்பர்கள் குழு, காந்திகிராம பல்கலைக்கழக அணி, திண்டுக்கல் வாலிபால் கிளப் அணிகள் விளையாடின. போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 3 முறை மோதின. முடிவில் மதுரை போலீஸ் அணியும், நத்தம் நண்பர்கள் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மதுரை போலீஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை, கேடயம் வழங்கப்பட்டது.