மதுரை மத்திய சிறை கைதி திடீர் சாவு

மதுரை மத்திய சிறை கைதி திடீரென்று இறந்தார்.;

Update:2023-05-10 02:05 IST

மதுரை ஆழ்வார்புரம் புளியந்தோப்புவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சம்பவத்தன்று இவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை மத்திய சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் குணமடையவில்லை. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்