ஜப்பானில் புல்லட் ரெயிலில் பயணம் செய்யும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
புல்லட் ரெயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டுமென முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜப்பான்,
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது, ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் இருக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புல்லட் ரெயிலில் பயணம் செய்கிறார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது; "ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரெயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.
உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரெயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்!"
இவ்வாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.