தரம் குறைந்த ஏரி நீர்; தாம்பரம் மாநகராட்சிக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நோட்டீஸ்

தரம் குறைந்த ஏரி நீர் தொடர்பாக விளக்கமளிக்க கோரி தாம்பரம் மாநகராட்சிக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2024-07-19 14:24 GMT

சென்னை,

தாம்பரம் மாநகராட்சிக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் முகாந்திர விளக்க கடிதம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கடந்த 19.07.2024 அன்று தாம்பரம் குடிநீரின் தரம் குறித்து நாளிதழில் வெளியான செய்தி தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளால் 19.07.2024 அன்று தாம்பரம் நகருக்கு குடிநீர் வழங்கும் மாடம்பாக்கம் ஏரி ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், மேற்படி ஏரியில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளின் ஆய்வறிக்கையில் நீரின் தரம் குறைவாக இருப்பதால் தாம்பரம் மாநகராட்சிக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய முகாந்திர விளக்க கடிதம் கோரப்பட்டுள்ளது. மேலும், பதில் விளக்க கடிதத்தின் அடிப்படையில் மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்