ஒன்றாக பணியாற்றிய போது காதல்...! காதலி கர்ப்பமானதால் போலீஸ்காரர் ஓட்டம்...!

திருவாரூர் அருகே பதிவு திருமணம் செய்துவிட்டு தலைமறைவானதாக ஆயுதப்படை காவலர் வீட்டின் முன்பு நள்ளிரவில் தர்ணா போராட்டம் நடத்திய பெண் போலீஸ்

Update: 2023-08-08 08:30 GMT

சென்னை,

சென்னையில் ஆயுதப்படை காவலராக இருக்கும் மதுமிதா தன்னுடன் பணிபுரியும் தண்டலையை சேர்ந்த அஜித்தை காதலித்து மூன்று வருடமாக ஒரே வீட்டில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.  கடந்த டிசம்பர் மாதம் மதுமிதா கர்ப்பமடைந்தார்.

இந்த நிலையில் அஜித்துக்கு வேறு பெண்ணை பேசி முடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சென்னையில் மதுமிதா புகார் அளித்தார். இதை தொடர்ந்து கடந்த மார்ச் 10 அன்று அஜித், மதுமிதாவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோவிலில் மாலை மாற்றிக் கொண்டு, பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

திருமணம் முடிந்த இரண்டே நாளில் நண்பர் வீட்டிற்கு போவதாக கூறிச் சென்ற அஜித் திரும்ப வராததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மதுமிதாவை அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மதுமிதா திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் இன்று புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்