காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வாணியம்பாடியில் காதல்திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-10 18:32 GMT

வாணியம்பாடியில் காதல்திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

வாணியம்பாடி அடுத்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (வயது 21), இவர் ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அதே தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த வினித் (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் 28-ந் தேதி பெற்றோர்களின் சம்மதத்துடன் திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை பகுதியில் உள்ள வெற்றிவேல் முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்த நிவேதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. வீட்டின் கதவு நீண்ட நேரமாக உள்பக்கமாக பூட்டி இருப்பதைக் கண்டு, சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது நிவேதா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்