பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயிலில் விழுந்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி: இளம்பெண் உயிரிழப்பு
தற்கொலை முயற்சியில் பலத்த காயமடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் முன் காதல் ஜோடி விழுந்தது.
இந்த சம்பவத்தில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிந்த வாலிபரை மீட்ட ரெயில்வே போலீசார், அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.