ஒலிபெருக்கி நிலைய உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

ஒலிபெருக்கி நிலைய உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-01-30 20:14 GMT

தாமரைகுளம்:

பாலியல் பலாத்காரம்

அரியலூர் மாவட்டம், குருவாலப்பர்கோவிலை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 44). புதுச்சாவடியில் ஒலிபெருக்கி நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 14 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ஆயுள் தண்டனை

இது குறித்து சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ேபாக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ராஜா ஆஜரானார்.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து விஜயகுமாரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்