லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கரூர் சர்ச் கார்னர் பகுதியில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு செல்போன் கடை அருகே வெங்கமேட்டை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ரமேஷ் (வயது 46) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.