லாட்டரி சீட்டு விற்றவர் கைது

பொள்ளாச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-07-30 23:17 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் கோட்டாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், சமத்தூர் ராம்நகர் காலனியை சேர்ந்த ராமசாமி (வயது 73) என்பதும், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 79 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்