லாட்டரி விற்பனை; முதியவர் சிக்கினார்
லாட்டரி விற்பனை; முதியவர் சிக்கினார்
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த வஞ்சியாபுரம் பிரிவு பகுதியில் கோட்டூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், சீனிவாசபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 62) என்பது தெரியவந்தது. இதையடுத்து கோட்டூர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 64 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.