லாட்டரி விற்றவர் சிக்கினார்

Update: 2023-03-16 19:00 GMT

ஓசூர்:

ஓசூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓசூர் காந்தி சிலை அருகில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்ற ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்த முருகேஷ் (வயது 44) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முருகேசன் மீது ஓசூர் டவுன், அட்கோ போலீசில் ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்