அனுமதியின்றி மண் அள்ளி வந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-04 19:02 GMT

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வானராங்குடி கொள்ளிடக்கரை பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி வயல் மண் எடுத்து செல்வது கண்டறியப்பட்டது. உடனடியாக லாரியை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கோவிலடி திருவள்ளூவர் புரத்தை சேர்ந்த காமராஜ் (வயது37), வானராங்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த துரைக்கண்ணு (38) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்