மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி
வாலாஜா அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த புலித்தாங்கல் கிராம அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 38), லாரி டிரைவர். இவர் நேற்று காலை தென்கடப்பந்தங்கல் பகுதியில் உள்ள கல் குவாரியில் டிப்பர் லாரியின் தொட்டியை தூக்கியபோது எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசி உள்ளது.
இதில் பாலசுந்தரம் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.