லாரி டிரைவர் திடீர் சாவு

தூசி அருகே லாரி டிரைவர் திடீரென இறந்தார்.;

Update:2023-06-11 17:21 IST

தூசி

கள்ளக்குறிச்சி அடுத்த புக்குவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யசாமி, இவரது மகன் சக்திவேல் (வயது 48), லாரி டிரைவர். சென்னையில் உள்ள லாரி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி தூசி அருகே செய்யாறை அடுத்த சிப்காட் தொழிற்சாலையில் பொக்லைன் உந்திரங்களை ஏற்றுவதற்காக வந்திருந்தார்.

அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று நெஞ்சுவலி இருப்பதாக கூறி சிக்கிச்சை பெற்றார். மீண்டும் வந்து லாரியில் படுத்திருந்தார்.

மறுநாள் காலை அவர் எழுந்திருக்கவில்லை. அவரை அங்கிருந்தவர்கள் எழுப்ப முயன்றபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அய்யாசாமி தூசி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்