ரெயில் முன் பாய்ந்து லாரி டிரைவர் தற்கொலை

வடமதுரையில் ரெயில் முன் பாய்ந்து லாரி டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-09-13 16:48 GMT

வடமதுரை அருகே உள்ள வேலாயுதம்பாளையம் மூனாண்டிபட்டியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 37). இவர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் சுப்பையா இன்று வடமதுரை ெரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள பகுதிக்கு வந்தார். அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ெரயில் முன் பாய்ந்து சுப்பையா தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த சுப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்