லாரி டிரைவர் தற்கொலை
தட்டார்மடம் அருகே லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள பிச்சுவிளையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). லாரி டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 5 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.