மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

கும்பகோணத்தில் உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-02-22 20:37 GMT

கும்பகோணம்.

கும்பகோணத்தில் உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

மணல் ஏற்றி வந்த லாரிகள்

பாபநாசம் அருகே உள்ள புத்தூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து கும்பகோணம் பைபாஸ் சாலை வழியாக அரசு விதிமுறைகளை மீறி லாரிகளில் மணல் எடுத்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அசூர் பைபாஸ் சாலை பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை நடந்தது. அப்போது 2 லாரிகளின் உரிமங்களும் புதுப்பிக்கப்படாமலும், காப்பீடு மற்றும் வரி செலுத்தாமலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் ஏற்றி வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

பறிமுதல்

இதைத்தொடர்ந்து 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து கும்பகோணம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தாமரையிடம் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் அறிவுறுத்தினார். அதன் படி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தாமரை, உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 2 லாரிகளுக்கு ரூ.71 ஆயிரம், இதில் வரி செலுத்தாத ஒரு லாரிக்கு மட்டும் கூடுதலாக ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்தார்.

ரத்து செய்ய பரிந்துரை

மேலும், லாரி டிரைவர்களான சின்னக்கருப்பூர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கார்த்திக் மற்றும் இந்திரா காந்தி சாலை பகுதியைச் சேர்ந்த ராஜாகண்ணு மகன் சத்தியராஜ் ஆகிய 2 பேரின் ஒட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்