விருதுநகரை தொடர்ந்து புறக்கணிக்கும் நெடுந்தூர பஸ்கள்

விருதுநகரை தொடர்ந்து புறக்கணிக்கும் நெடுந்தூர பஸ்கள் குறித்து அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-06-19 19:04 GMT


விருதுநகரை தொடர்ந்து புறக்கணிக்கும் நெடுந்தூர பஸ்கள் குறித்து அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

38 ஆண்டுகள்

விருதுநகரை தலைமையிடமாக கொண்டு கடந்த 1985-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் உருவானது. இந்த மாவட்டம் உருவாகி 38 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் விருதுநகரில் பல்வேறு நிலைகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள்ளது.

300 ஏக்கர் நிலப்பரப்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாகம், நீதிமன்ற வளாகம், தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவக்கல்லூரி, விருதுநகர் சாத்தூர் இடையே தொழில் பூங்கா, விருதுநகர்-அழகாபுரி ரோட்டில் சிட்கோ தொழிற்பேட்டை, கல்வித்துறையில் மாநில அளவில் சாதனைக்கான நடவடிக்கை என பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஸ்கள் புறக்கணிப்பு

மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கான இரு வழி ெரயில் பாதை விருதுநகர் வழியாக செல்லும் நிலை, மானாமதுரையில் இருந்து விருதுநகருக்கு அகல ரெயில் பாதை, மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்க மத்திய அரசு திட்டம், இ-நாம் திட்டம் என மத்திய அரசு அறிவித்த பல திட்டங்கள் நிறைவேறியிருந்தாலும் சில திட்டங்கள் நிறைவேற வேண்டிய நிலையில் உள்ளது.

மாவட்ட தலைநகராக விருதுநகர் உருவாகி 38 ஆண்டுகள் ஆன பின்பும் விருதுநகருக்கென 2 பஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்ட பின்பும், விருதுநகரை நெடுந்தூர பஸ்கள் தொடர்ந்து புறக்கணிக்கும் நிலை நீடிக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ஒரு மாவட்ட தலைநகரை நெடுந்தூர பஸ்கள் புறக்கணிப்பது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

அமைச்சர்கள் நடவடிக்கை

அதிலும் வணிகநகரான விருதுநகர் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வணிகரீதியாக தொடர்புடைய நிலையில் பஸ் போக்குவரத்தில் விருதுநகர் முழுமையடையாத நிலை நீடிக்கிறது. இதனால் அவதிப்படுவது விருதுநகர் வாழ் பொதுமக்கள் தான். எனவே மாவட்ட அமைச்சர்கள் விருதுநகரை நெடுந்தூரபஸ்கள் புறக்கணிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து நெடுந்தூர பஸ்களும் விருதுநகர் வழியாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்