மேலூர் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
மேலூர் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.;
மேலூர்
மேலூர் ஊராட்சி ஒன்றியம் டி.வெள்ளாளப்பட்டி ஊராட்சி வி.மாணிக்கம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மதுரை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் நடராஜ் குமார் தலைமையில் நடைபெற்றது. முகாமில் குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை, தடுப்பூசி பணி, தீவனப் பயிர் மற்றும் தீவனப்புல் சாகுபடி விளக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலட்டு நீக்க சிகிச்சை, சுண்டுவாத அறுவை சிகிச்சை, ஆண்மை நீக்கம் போன்ற சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசு வழங்கினர். சிறந்த முறையில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு டி.வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி அருவகம், துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். உதவி இயக்குனர்கள் டாக்டர் பழனிவேல், கிரிஜா, கால்நடை ஆய்வாளர்கள் பாத்திமா, சசிகலா, மச்ச பாண்டி, லதா, பிரேமலதா ஊராட்சி செயலர் பொன்னுச்சாமி, கிராம மக்கள் கலந்து கொண்டனர்.