பாம்பு கடித்து சிறுமி சாவு

பாம்பு கடித்ததில் சிறுமி பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-06-22 00:15 IST

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது 43). இவரது மகள் செல்வி (15). இவள் அதே பகுதியில் உள்ள தனது மாமா அங்கமுத்து என்பவர் வீட்டில் வசித்து வந்தாள். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டு வாசலில் செல்வி தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது பாம்பு ஒன்றை சிறுமியை கடித்தது. இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறினாள். இந்த சத்தம்கேட்டு வந்த உறவினர்கள், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று செல்வி பரிதாபமாக இறந்தாள். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்