பாம்பு கடித்து சிறுமி பலி

வீட்டின் அருகில் விளையாடியபோது பாம்பு கடித்து சிறுமி பலி

Update: 2022-09-28 23:34 GMT

ஏர்வாடி:

நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் வேலவர் காலனியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி ஜெயபாரதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜெயபாரதி கணவர் அருள்ராஜை விட்டு பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் தந்தை வீடான திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தில் கடந்த 4 மாதமாக வசித்து வருகிறார். இவர்களது 2-வது குழந்தை ரிந்தியா (5). ஏர்வாடியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். நேற்று முன்தினம் மாலையில் சிறுமி ரிந்தியா வீட்டிற்கு பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளை பாம்பு கடித்தது. உடனடியாக உறவினர்கள் சிறுமியை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று சிறுமி ரிந்தியா இறந்தாள். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்