தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு; 5,551 பேர் எழுதினர்
நெல்லை மாவட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை 5,551 பேர் எழுதினர்
அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நேற்று நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் டவுன், மேலப்பாளையம், பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி உள்பட 19 இடங்களில் உள்ள பள்ளிகளில் தேர்வு நடைபெற்றது. இதில் 5,551 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 583 பேர் வரவில்லை.
இந்த தேர்வை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த தேர்வு மூலம் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படுகிறது.