நெசவு தொழிலாளிக்கு சாகும் வரை சிறை

Update: 2022-08-16 18:19 GMT


திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் அலி (வயது 40). நெசவுத் தொழிலாளி. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்பாஸ் அலி 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் அவிநாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அப்பாஸ் அலியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் அலிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அப்பாஸ் அலியை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்