மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது
தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.;
தலைவாசல்:-
தலைவாசல் அருகே சிறுவாச்சூரில் இருந்து பாரதி நகர் செல்லும் வழியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தாலுகா எழுத்தூர் மலை கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4 லாரி டியூப்பில் 120 லிட்டர் சாராயம் கடத்தி வருவதை கண்டுபிடித்த போலீசார் அதை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ஜுனனை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.