மது விற்றவர் கைது
நமத்தோடு கிராமத்தில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
சேத்துப்பட்டு
பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நமத்தோடு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 47) என்பவர் போலீசாரை பார்த்ததும் ஓடினார்.
உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் கூடுதல் விலைக்கு மது விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.